காலங்கள் மாறலாம்!
காயங்கள் மறையலாம்!
இயற்கைதன் கவின் தான் மறையாதே!!
இயற்கையவள் அன்பு தான் ஆறாதே!!
இயற்கையவளின் இன்னுயிர் பேண,அவள் அழகின் ஆழியை அழியாது காக்க முயல்பவர்களுக்கான அரியதொரு விழா இது.Ecosummit கல்லூரி மாணவர்களிடையே இயற்கைதன் இன்றியமையாமையை விவரிக்க கிண்டி பொறியியல் கல்லூரியின் Green Brigades குழுவினர் நடத்தும் நிகழ்ச்சி.இயற்கை குறித்து பலவித போட்டிகள், கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள் நடைபெறும்.